இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதிய தேசிய தலைவரின் கீழ் காங்கிரஸ் வலுவடையும்: அமித் பட்கர்

புதிய தேசிய தலைவரின் கீழ் காங்கிரஸ் கட்சி வலுவாக வளரும் என்று கோவா கட்சியின் தலைவர் அமித் பட்கர் தெரிவித்தார். 

News image
Updated On :17 அக்டோபர் 2022, 7:39 am

DIN

புதிய தேசிய தலைவரின் கீழ் காங்கிரஸ் கட்சி வலுவாக வளரும் என்று கோவா கட்சியின் தலைவர் அமித் பட்கர் தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியில் களமிறங்கியுள்ளனர். 

கோவாவில் மொத்தமுள்ள 31 பிரதிநிதிகளில் இதுவரை 75 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

பனாஜியில் உள்ள மாநில கட்சி தலைமையகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் வாக்குப்பதிவு தொடங்கியதுமே முதலில் வாக்களித்தார். 

வாக்களித்த பிறகு பட்கட் தனது சுட்டுரையில், 

கோவாவின் பிரநிதியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு, கர்கோரம் தொகுதியிலிருந்து வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

இந்தியா முழுவதும் புதிய தேசியத் தலைவரின் கீழ் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள மாநில அலுவலகங்களில் உள்ள கட்சியின் வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.