இந்தியாவுக்கும் வந்துவிட்டதாம் பிஎஃப்.7:  புதிய வகை கார் அல்ல; வைரஸ்

பரவும் வேகம் அதிகம் கொண்ட புதிய வகை ஒமைக்ரானின் உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் வந்துவிட்டதாம் பிஎஃப்.7:  புதிய வகை கார் அல்ல; வைரஸ்
இந்தியாவுக்கும் வந்துவிட்டதாம் பிஎஃப்.7:  புதிய வகை கார் அல்ல; வைரஸ்


புது தில்லி: இந்தியாவுக்கு வரும் 3 வாரங்கள் அபாயகரமானவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பரவும் வேகம் அதிகம் கொண்ட புதிய வகை ஒமைக்ரானின் உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் சீனா மற்றும் அமெரிக்கா, ஐரோக்கிய நாடுகளில் தற்போது கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வரும் பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலில், குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வுக் கூடத்தல் முதல் பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிஏ.5 வகையின் துணைப்பிரிவான பிஎஃப்7 வகை வைரஸ்தான் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதையடுத்து, நாட்டில் பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அது மிகவும் வேகமாகப் பரவும் திறன் கொண்டதா என்றும், அதனால் நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கிறதா என்பதும் தீவிரமாகக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில் முதல் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வாரத்துக்குள் அங்கு கரோனா பரவல் அதிகரித்து, மீண்டும் பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கும்முறை தொடங்கிவிட்டது.

தற்போது நாட்டில் நாள்தோறும் 2000க்கும் குறைவான கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலைடியில், கேரளம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் ஒரு சில வாரங்களாக பாதிப்பு சற்று அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com