தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை, ரூ.2,000 அபராதம்: எங்கே?

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார். 
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார். 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 

தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பட்டாசுகளை சேமித்தல், விற்பனை செய்தலில் ஈடுபடுபவர்கள் வெடிபொருள் சட்டத்தின் 9-பி பிரிவின் கீழ் ரூ.5000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். 

தீபாவளி உள்ளிட்ட அனைத்து வகையான பண்டிகைகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை முழுமையான தடையை செப்டம்பர் மாதம் மீண்டும் விதித்தது.

விளக்கை ஏற்றுங்கள், பட்டாசு வேண்டாம் "தியே ஜலாவோ படகே நஹி" என்ற பொது விழிப்புணர்வு பிரசாரம் அக்.21 அன்று தொடங்கப்படும். மேலும், அன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் தில்லி அரசு சார்பில் 51 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படுகிறது. 

தில்லியில் பட்டாசுகளை வாங்குவதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீறுவோருக்கு ரூ.200 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறை விதிக்கப்படும். 

தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களையும் அமைத்துள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி வரை 188 விதிமீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com