செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

‘தலித்துகளை பலிகடாவாக்கும் காங்கிரஸ்’: மாயாவதி விமர்சனம்

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

மாயாவதி

Published On :

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலி ஆடுகளாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “பாபாசாகேப் அம்பேத்கரையும் அவரது சமூகத்தின் பங்களிப்பையும் மதிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததை காங்கிரஸ் கட்சியின் வரலாறே நமக்கு சாட்சியாக தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி அதன் வெற்றிகரமான காலங்களில் தலித் மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான மரியாதையையும் குறித்து கவலை கொண்டதில்லை. மாறாக அதன் மோசமான நாள்களில் தலித் மக்களை பலி ஆடுகளாகப் பயன்படுத்து வருகிறது” என பதிவிட்டு விமர்சித்துள்ளார். 

மேலும் அவர், காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான காலங்களில் தலித் அல்லாதவர்களை முன்னிறுத்தியும், மோசமான காலங்களில் தலித் மக்களை முன்னிறுத்தியும் அரசியல் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள மாயாவதி உண்மையாலும் இது தலித் மக்களின் மீதான பாசம்தானா? என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.