வங்கதேசத்தில் 'சித்ரகாங் புயல்' கரையைக் கடந்தது

வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிமுதல் 11.30 மணிக்குள்  சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்கு இடையே   சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சித்ரகாங் புயலாக வலுவடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்கதேசத்தில் கரையைக் கடந்துள்ளது.

இந்த புயல் மேலும் வலுவிழந்து வடகிழக்கு மாநிலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக, 'சித்ரகாங்' புயலால் ஏற்படக்கூடிய பாதிப்பை மேற்கொள்ள, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மக்கள் தங்குமிடங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கு வங்க அரசு எடுத்தது.

தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பக்காலி கடல் கடற்கரையில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை, சித்ரகாங்  புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால், "எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அக்டோபர் 25-ம் தேதி மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது  கடல் பகுதிகளுக்கு செல்வதையோ தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது". என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

சித்ரகாங்  புயலின் தாக்கத்தினால், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு க சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com