காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் தெலங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.
தமிழகத்தில் தொடங்கிய நடைபயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து இன்று தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த 50 நாள்களாக 4 மாநிலங்களில் 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர்.
இதையும் படிக்க | கோவை கார் வெடிப்பு: 6-வது நபர் கைது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபயணமானது மூன்று நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 50வது நாள் நடைபயணம் தொடங்கியுள்ளது.
வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தை நடைபயணம் சென்றடைகிறது. அன்று சார்மினாரில் தேசியக் கொடியை ஏற்றும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026

சிந்தை உறைபவன்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

