நீட் தோ்வு விடைக்குறிப்புகள் வெளியீடு: சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்

நீட் தோ்வு முடிவுகள் வரும் செப். 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விடைக்குறிப்புகள் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டன.
நீட் தோ்வு விடைக்குறிப்புகள் வெளியீடு: சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்
நீட் தோ்வு விடைக்குறிப்புகள் வெளியீடு: சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்

நீட் தோ்வு முடிவுகள் வரும் செப். 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விடைக்குறிப்புகள் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

விடைக்குறிப்புகளைக் கொண்டு, நாம் எழுதிய தேர்வின் முடிவினை சரிபார்க்கும் வழிமுறை..

விடைக் குறிப்புகளுடன் ஓஎம்ஆர் விடைத்தாள் ஆகியவற்றை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களது நீட் தேர்வு மதிப்பெண்ணை ஓரளவுக்கு தோராயமாக மதிப்பிடலாம்.

அதற்கு, நீட் இளநிலை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https:/neet.nta.nic.in/ என்ற தளத்துக்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் ஆன்சர் கீ, ஓஎம்எஆர் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பதில் சவால் என்பதைக் கிளிச் செய்தால் அடுத்தப் பக்கம் வரும்.

உங்களது விண்ணப்ப எண், கடவுச் சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட்டு விடைக்குறிப்புகளை பார்க்கவும்.

அதாவது, ஒரு சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள். ஒரு தவறான பதிலக்கு ஒரு மதிப்பெண், மாணவர் பெறும் மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மொத்த மதிப்பெண்ணை கணக்கிடலாம்.

விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், ரூ.200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் தோ்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நிகழாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் 1.41 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது.

அதற்கான முடிவுகள் வரும் செப். 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விடைக்குறிப்புகள் என்டிஏ இணையதளப் பக்கத்தில்  வெளியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com