பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி) கடந்த 2021-22 நிதியாண்டின் கடைசி 3 காலாண்டுகளில் பதிவான விகிதத்தைக் காட்டிலும், 13.5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ப்ளூம்பெர்க் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே (ஜனவரி - மார்ச் 2022) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிட்டனின் ஜிடிபியைத் தாண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளது. அந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கிலாந்தின் 813 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில் 864 பில்லியன் டாலராக இருந்தது.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: மு.க. ஸ்டாலின்
மேலும் , ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பிரிட்டனின் ஜிடிபி 763 பில்லியன் டாலர்கள். ஆனால், அதே காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 823 பில்லியன் டாலராக(ரூ.64.95 லட்சம் கோடி) அதிகரித்திருப்பதால் பொருளாதார வலிமைமிக்க நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்திலிருந்த இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பொருளாதாரத்தில் வலிமை கொண்ட நாடுகளாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்த இந்தியா முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

