இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிவ ருத்ர நடனமாடியபடியே உயிரிழந்த கலைஞர்: அதுவும் 20 வயதில்

ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் நடந்த இசைக் கச்சேரியின்போது, பார்வதி வேடமணிந்தபடி, சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர் ஒருவர் மேடையிலேயே சரிந்து பலியானார்.

News image
சிவ ருத்ர நடனமாடியபடியே உயிரிழந்த கலைஞர்: அதுவும் 20 வயதில்
Updated On :8 செப்டம்பர் 2022, 12:34 pm

DIN


ஜம்மு: ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் நடந்த இசைக் கச்சேரியின்போது, பார்வதி வேடமணிந்தபடி, சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர் ஒருவர் மேடையிலேயே சரிந்து பலியானார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஜம்முவின் பிஷ்னாஹ் டெஹில் பகுதியில் நடந்த இசைக் கச்சேரியில், 20 வயதே ஆன யோகேஷ் குப்தா, சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்தநிலையில் பலியானது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த சிவ ருத்ர நடன நிகழ்ச்சியின்போது, பார்வதி போல மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு மேடையில்  சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்த யோகேஷ், மேடையிலேயே சரிந்து விழுந்தார். நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்ட, நடனத்தின் ஒரு அசைவுதான் அவர் படுத்திருப்பது என்று நினைத்திருந்தனர். ஆனால் அவர் எந்த கரகோஷத்துக்கும் அசையவில்லை. பிறகு மேடைக்கு அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று அசைவற்று இருந்த யோகேஷ் குப்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இசைக் கலைஞர் நடனமாடியபடியே உயிரிழந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் கவலையோடு பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.