மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 செப்டம்பர் 2022, 6:59 am

DIN

2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.

ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.