மக்களுக்காக உழைக்கும்போது சோர்வாக உணராதீர்கள்: நவீன் பட்நாயக்

மக்களுக்காக உழைக்கும்போது சோர்வை உணர்வதில்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். 
மக்களுக்காக உழைக்கும்போது சோர்வாக உணராதீர்கள்: நவீன் பட்நாயக்
Published on
Updated on
1 min read

மக்களுக்காக உழைக்கும்போது சோர்வை உணர்வதில்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். 

முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் அளித்த பேட்டியின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

75 வயதான பட்நாயக் நாட்டின் நிதித் தலைநகருக்கு மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு ஒடிசா திரும்புவதற்கு முன்பு வியாழக்கிழமை மும்பை உணவகத்தில் விடியோ பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, முதல்வர் ஆனந்த் மஹிந்திரா, அனில் அகர்வால், குமார் மங்கலம் பிர்லா போன்ற தொழில் அதிபர்களுடன் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடல் உள்பட 18 கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

முதல்வரின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியனிடம் கலந்துரையாடினார். அப்போது நேற்று காலை முதல் இரவு வரை 18 கூட்டங்களில் கலந்துகொண்டு சோர்வாக உள்ளீர்களா? என்று கேட்டதற்கு, இல்லை, நான் எப்போதும் சோர்வடையவில்லை என்றார் பட்நாயக்.

நீங்கள் மக்களுக்காக உழைக்கும்போது உண்மையில் உங்களுக்குச் சோர்வு ஏற்படுவதில்லை என்று முதல்வர் கூறினார். அதற்கு செயலாளரான பாண்டியன் ஒப்புக்கொண்டார். இது உண்மையில் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றது.

தனது மும்பை பயணத்தின்போது, பட்நாயக் முதலீட்டாளர்களை மாநிலத்தின் மாற்றத்திற்கான பயணத்தில் பங்குதாரர்களாக இருக்குமாறும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை புவனேஸ்வரில் நடைபெறும் மேக் இன் ஒடிசா கான்க்ளேவ்-யில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். 

மேலும், கரோனா பரவியதைத் தொடர்ந்து 2020 முதல் பட்நாயக் மாநில செயலகத்தில் அலுவலகத்திற்குச் செல்லவில்லை என்றும் மக்களின் குறைகளைக் கேட்கவில்லை என்றும் அடிக்கடி குற்றம் சாட்டும் பாஜக தலைவர்கள் உள்பட விமர்சகர்களுக்கான பதிலாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com