குனோ தேசிய பூங்காவில் 8 நமீபியா சிறுத்தைகளை இன்று விடுவிக்கிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தனது 72 ஆவது பிறந்தநாளான சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் 8 சிறுத்தைகளை விடுவிக்கிறார்.
குனோ தேசிய பூங்காவில் 8 நமீபியா சிறுத்தைகளை இன்று விடுவிக்கிறார் மோடி!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது 72 ஆவது பிறந்தநாளான சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் 8 சிறுத்தைகளை விடுவிக்கிறார்.

சிறுத்தைகள் (5 பெண், 3 ஆண் சீட்டாக்கள்) தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 'திட்ட சீட்டா' மற்றும் நாட்டின் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடங்களை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க உள்ளார். இதற்காக அவர் சனிக்கிழமை மத்தியப்பிரதேசம் வருகிறார்.

முன்னதாக, சீட்டா திட்டத்தின் தலைவர் எஸ்பி யாதவ் கூறுகையில், பிரதமர் மோடி குனோ தேசிய பூங்கா எண் ஒன்றிலிருந்து இரண்டு சிறுத்தைகளை விடுவிக்கிறார் என்றும், அதன் பிறகு சுமார் 70 மீட்டர் தொலைவில், இரண்டாவது எண்ணிலிருந்து, மற்றொரு சிறுத்தையை விடுவிக்கிறார் என்று கூறினார்.

1952 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிறுத்தை அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் எட்டு சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எட்டு சிறுத்தைகளும் குவாலியரில் ஒரு சரக்கு விமானத்தில் சிறுத்தைகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டது. 

பின்னர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் குவாலியர் விமானப்படை நிலையத்தில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு சிறுத்தைகளை கொண்டுச் செல்லப்பட்டது.

இந்தியாவில் திறந்த காடுகள் மற்றும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கு சிறுத்தைகள் உதவும். மேலும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் நீர் பாதுகாப்பு, கார்பன் சுரப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை மேம்படுத்தவும் உதவும்.

"சீட்டா வகை சிறுத்தை வேகமான ஓடக்கூடிய விலங்கு என்றும், இது மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. குனோவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுத்தைக்கான வாழ்விடமானது மிகவும் அழகானது மற்றும் சிறந்தது, அங்கு பெரிய புல்வெளிகள், சிறிய குன்றுகள் மற்றும் காடுகள் உள்ளன. சிறுத்தைகளுக்கு மிகவும் ஏற்றது. குனோ தேசிய பூங்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்டையாடும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

மேலும், "அனைத்து சிறுத்தைகளிலும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். இது தவிர, ஒவ்வொரு சிறுத்தைக்கு பின்னால் ஒரு பிரத்யேக கண்காணிப்பு குழு இருக்கும், அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு இடத்தை வைத்திருப்பார்கள்," யாதவ் கூறினார்.

மீதமுள்ள சிறுத்தைகள் அவற்றுக்காக உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிக்கப்படும்.

இந்திய அரசின் லட்சிய திட்ட சீட்டாவின் கீழ், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச வழிகாட்டுதல்களின்படி காட்டு இனங்கள் குறிப்பாக சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றான 'புராஜெக்ட் டைகர்', புலிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பங்களித்துள்ளது.

சிறுத்தைகளின் மறு அறிமுகம் இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com