வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிரதமர் மோடியின் பரிசுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்!

பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருள்கள் இன்று முதல் ஏலத்தில் விடப்படுகின்றன. 

News image
தில்லி இந்தியா கேட் அருகில் உள்ள தேசிய நவீன கலை காட்சிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்த பிரதமா் மோடிக்கு வந்த பரிசுப் பொருள்களை பாா்வையிடும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி. கிஷ
Updated On :17 செப்டம்பர் 2022, 3:22 am

DIN

பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருள்கள் இன்று முதல் ஏலத்தில் விடப்படுகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச் சிலை உள்ளிட்ட 1,200 பொருள்கள் இன்று முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. 

இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தில்லியில் செய்தியாளர்களிடம், 'விநாயகர் சிலை, அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோயிலின் மாதிரி சிலை, வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிலை உள்பட பிரதமருக்கு நினைவுப் பரிசாக அளிக்கப்பட்ட பொருள்கள் இணைய வழி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. 

இவற்றின் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையாக நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். சில விளையாட்டு வீரர்கள் பிரதமருக்கு பரிசளித்த விளையாட்டுத் துறை தொடர்பான நினைவுப் பொருள்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

தில்லி தேசியக் கலைக்கூடத்தில் உள்ள பிரதமர் மோடியின் பரிசுப் பொருள்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.