
தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தலைவர் பதவிக்கான தேர்தல் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜி23 அதிருப்தி தலைவர்களில் சிலரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சசி தரூரின் இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ‘ராகுல் காந்தி தலைவராக வேண்டும்’: தமிழக காங்கிரஸ் தீர்மானம்