காங்கிரஸ் தலைவராக விருப்பமில்லை: கமல்நாத்

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருக் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் தலைவராக விருப்பமில்லை: கமல்நாத்

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருக் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். 

தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவிக்கு அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு மூத்த தலைவர் சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை கமல்நாத் நேரில் சந்தித்தார். இதில் ராஜஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த கமல்நாத், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பதில் விருப்பமில்லை எனக் குறிப்பிட்டார். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். 

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது

சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 92 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com