
உத்தரகண்ட்: அங்கிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
டேஹ்ராடூன்: உத்தரகண்ட் விடுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் அங்கிதா பந்தாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மாநில அரசு, அங்கிதாவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கும். அனைத்து வழிகளிலும் குடும்பத்தினருக்கு உதவும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் நேர்மையான முறையில், துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!
இதுமட்டுமல்லாமல், காவல்துறையினரும், இந்த விடுதி மற்றும் அங்கு நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.
இதையும் படிக்க.. உங்கள் மகளிடம் இதைக் கேளுங்கள்!
இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறும். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை தர நீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.