உத்தரகண்ட் கொலை: விடுதியிலிருந்து உயிர் தப்பியது எப்படி? பகீர் கிளப்பும் தம்பதி

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் விடுதியில் அங்கிதா பந்தாரி கொலை செய்யப்பட்ட விடுதியிலிருந்து உயிரோது தப்பியது எப்படி என்பது குறித்து தம்பதி ஒன்று காவல்நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரகண்ட் கொலை: விடுதியிலிருந்து உயிர் தப்பியது எப்படி? பகீர் கிளப்பும் தம்பதி
உத்தரகண்ட் கொலை: விடுதியிலிருந்து உயிர் தப்பியது எப்படி? பகீர் கிளப்பும் தம்பதி


மீரட்: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் விடுதியில் அங்கிதா பந்தாரி கொலை செய்யப்பட்ட விடுதியிலிருந்து உயிரோது தப்பியது எப்படி என்பது குறித்து தம்பதி ஒன்று காவல்நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ஆறு மாதங்களுக்கு முன்பு, அந்த விடுதியில் பணிக்குச் சேர்ந்த ரிஷிதா (27), விவேக் பரத்வாஜ் (29) தம்பதி அங்கு என்ன நடக்கிறது என்பதை சிறிது நாள்களிலேயே புரிந்து கொண்டனர்.

வரவேற்பாளராக பணியாற்றிய ரிஷிதா, விடுதிக்கு வரும் விருந்தினர்களுக்கு, முக்கயிக் குற்றவாளி புல்கித் ஆர்யா பெண்களையும் போதைப் பொருள்களையும் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பதை அறிந்து கொண்டார்.

இங்கிருப்பது இருவருக்கும் ஆபத்து என்று அறிந்து, ஒரு நாள் நள்ளிரவில் இருவரும் தங்களது உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு 10 கிலோ தொலைவுக்கு நடந்தே வந்து எங்கள் ஊருக்கு பேருந்தைப் பிடித்து தப்பி வந்தோம்.

நாங்கள் இங்கு வந்த பிறகும், மற்ற குற்றவாளிகள் இருவரும் எங்களை தொலைபேசியில் அழைத்து வேலைக்கு வருமாறு வற்புறுத்தினர். அதே வேளையில், எங்களது ஊதியத்தைப் பெற காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லாமல் போனது.

முன்னதாக, ஒரு போலியான திருட்டு வழக்கை எங்கள் மீது பதிந்து, அதற்கு கைப்பட மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி, எங்களை ஒரு கைதிகள் போல அவர்கள் நடத்தினார்கள் என்றும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை காவல்துறையிடம் விளக்கியுள்ளனர்.

அங்கிதா கொலையைத் தொடர்ந்து இதற்கு முன்பு அங்கு வரவேற்பாளர் பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தம்பதிகளின் வாக்குமூலம் மிக முக்கிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com