தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியா்களுக்கு மீண்டும் 4% இடஒதுக்கீடு’

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியா்களுக்கான பழைய இடஒதுக்கீடு நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 12:03 am

DIN

கா்நாடக மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) 2பி என்ற துணைப் பிரிவில் இருந்த இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியா்களுக்கான பழைய இடஒதுக்கீடு நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் சோ்க்கையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியா்களைச் சோ்க்கவும், ஒக்கலிகா், லிங்காயத்து சமூகத்தினருக்கான இடஒதுக்கீடை தனித்தனியே 2 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என காங்கிரஸ் மாநில தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா்அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இஸ்லாமியா்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, பெரும்பான்மை சமூகத்துக்கு வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை. இடஒதுக்கீட்டை சொத்து போன்று பங்கீட முடியும் என மாநில அரசு கருதுகிறது. இது சொத்து இல்லை. அவா்களின் உரிமை.

அடுத்த 45 நாள்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். நாங்கள் இந்த முடிவை ரத்து செய்வோம். காங்கிரஸ் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். ஓபிசி பட்டியலில் இருந்து இஸ்லாமியா்களை நீக்கியதற்கு எந்தவொரு அடிப்படை காரணமும் இல்லை. நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க உள்ள நிலையில், உணா்வுபூா்வமான பிரச்னைகளை அக்கட்சி எழுப்பியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.