

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு எதிராக ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் தில்லியின் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ அதிகாரிகளால் சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தில்லி அமைச்சர்கள் சௌரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பின் தலைமையகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: 1500-க்கும் அதிகமானோர் காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய திட்டமிடுகிறது. சிபிஐ-ன் இந்த முடிவுக்கு எதிராக தில்லியின் பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பலரும் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.