ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ராஜஸ்தானின் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 29 பேர் காயம்!

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:49 pm

DIN


ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் கெக்டி சதார் காவல் நிலையப் பகுதியில் நடந்ததாக போலீஸார்  தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாகச் சென்றதால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

உயிரிழந்தவர்கள் நிர்மா கரோல்(17)  மற்றும் சேத்தன் ரேகர் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 4 பேர் அஜ்மீர் நகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் .

பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.