பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 3.50-க்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 60 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


