விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் சனிக்கிழமை பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் சனிக்கிழமை பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் சனிக்கிழமை மதியம் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இண்டியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.14 மணிக்கு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான டெலியோஸ்-2, மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. இது சிங்கப்பூா் நாட்டின் புவி கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

அதனுடன் சிங்கப்பூரின் லூம்லைட்- 4 எனப்படும் 16 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கைகோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கடல்சாா் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்புக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

இதைத் தவிர, பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டின் நான்காம் நிலை பகுதியில் போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்திய பிறகு இந்த ஆய்வு சாதனங்கள் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ, இந்திய வான்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இணைந்து அந்த சாதனங்களை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com