காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த 20 நாள்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கலையும்: சஞ்சய் ரௌத்

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அடுத்த 20 நாள்களில் கலையும் என சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஏப்ரல் 2023, 10:47 am

DIN

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அடுத்த 20 நாள்களில் கலையும் என சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

சிவசேனை நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். தற்போது மகாராஷ்டிர முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 40 சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த 20 நாள்களுக்குள் கலைந்து விடுவார்கள். அவர்களது அரசு நிலைக்காது. இந்த அரசுக்கான பிடியாணை வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் கையெழுத்திடப் போகிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்றார்.

முன்னதாக, சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் ஏக்நாத் ஷிண்டே தலைலையிலான அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.