பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஷிவமொகா தொகுதியில் பாஜக சார்பில் வீரசைவ-லிங்காயத் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஈஸ்வரப்பா,
ஷிவமொக்கா தொகுதியில் 50,000 முதல் 55,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு முஸ்லிம் வாக்குகூட தேவையில்லை என்பதை நான் நேரடியாக கூறுகிறேன். மருத்துவம் மற்றும் கல்விக்காக பல்வேறு உதவிகளை அவர்களுக்கு செய்துள்ளோம். அந்த முஸ்லிம் மக்கள் எங்களுக்காக வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் ஹிந்துகளையும் முஸ்லிம்களையும் பிரித்து வருகிறார்கள். ஹிந்துகள் தாழ்ந்தவர்களாகவும், முஸ்லிம்கள் உயர்ந்தவர்களாகவும் ஆக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால், சில தேசியவாத முஸ்லிம்கள் பாஜகவுக்கு கண்டிப்பாக வாக்களிப்பார்கள்.” எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சர்ச்சை: பெரியார் படம் நீக்கம்!
மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க ராகுல் வலியுறுத்தல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

