மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது  நக்சல்கள் தாக்குதல் நடத்திற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2023, 12:15 pm

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது  நக்சல்கள் தாக்குதல் நடத்திற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும் எனவும், கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களை  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிக் கொண்டிருந்த காவலர்கள் சென்ற வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர். 

.இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.