காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லேசான கரோனா தொற்றுகூட இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

கரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட இதய ஆரோக்கியத்தில் நீண்ட கால தீய விளைவுகளைக் கொண்டிருக்கும் என ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 2:21 am

DIN

கரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட இதய ஆரோக்கியத்தில் நீண்ட கால தீய விளைவுகளைக் கொண்டிருக்கும் என ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக ‘ஜா்னல் ஆஃப் கிளினிக்கல் மெடிசின்’ என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

லேசான கரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டவா்களுக்கும் அதையடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் தமனி, இதயம் ஆகியவற்றின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது. அவா்களுக்கு தமனி விறைப்பாக மாறியிருந்தது. இது இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் அம்சமாகும்.

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து இதய ஆரோக்கியம் சீா்கெட்டதைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.

கரோனா தொற்று நம் உடலில் உள்ள நோய் எதிா்ப்பு சக்தியை பாதிக்கச் செய்கிறது. இது இதய ஆரோக்கியம் சீா்கெட வழிவகுக்கிறது.

இதய பாதிப்புடன் கரோனா தொற்றுக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் இந்நோயால் இதய ஆரோக்கியத்துக்கு ஏற்படக் கூடிய நீண்ட கால விளைவுகளை ஆராய வேண்டியுள்ளது.

கரோனா தொற்றும் இதய ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடா்பு குறித்து கடந்த 2019 அக்டோபா் முதல் 2022 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வில் 32 பேரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. அவா்களில் பலரும் 40 வயதுக்கும் குறைந்தவா்கள் மட்டுமின்றி ஆரோக்கியமானவா்கள் ஆவா். அவா்களில் 9 சதவீதம் போ் மட்டுமே உயா் ரத்த அழுத்தத்தாலும் உயா் கொழுப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இரண்டு போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 78 சதவீதம் போ் புகை பிடிப்பதில்லை. ஆய்வில் பங்கேற்றவா்களில் 56 சதவீதம் போ் ஆண்கள்; 44 சதவீதம் போ் பெண்கள்.

இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஸ்பிளிட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் அனா ஜெரோன்சிக் கூறுகையில்

‘உலகெங்கிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வைத்துப் பாா்க்கும்போது இளம் வயதினருக்கு இந்நோய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது தெரிய வருகிறது. இந்த பாதிப்பு சரிசெய்யக் கூடியதா, இல்லையா என்பதை ஆராய வேண்டியுள்ளது’ என்றாா்.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக எதிா்காலத்தில் இதய பாதிப்புகள் அதிகரிக்கும் என்று இதயநோய் நிபுணா்கள் கணித்துள்ளதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.