
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் ஏஎன்ஐ டிவிட்டர் கணக்கை முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஏஎன்ஐ டிவிட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13க்கும் கீழ் இருந்ததாக கூறி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, பல மாற்றங்களை கொண்டு வந்தார். கட்டணத்தை கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கணக்கில் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.