விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தினமும் அதிகரிக்கும் டெங்கு பலி: வங்கதேசத்தில் மக்கள் அச்சம்!

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 261 ஆக உயர்ந்துள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2023, 7:05 am

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 261 ஆக உயர்ந்துள்ளன. 

இதுதொடர்பாக மருத்துவ சேவைகள் இயக்குநரகம் வெளியிட்ட தகவலில், 

வங்கதேசத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டாக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட 1,131 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 4,869 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வங்கதேசம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 9,264 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தாண்டில் டெங்கு பாதித்த 54,416 பேரில் 44,891 பேர் குணமடைந்துள்ளனர். 

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஷேக் அஸீனா சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.