ராகுல் காந்தி முத்தம்: ஓம் பிர்லாவுக்கு ஸ்மிருதி இரானி கடிதம்!

நாடாளுமன்றத்தில் பெண்களை நோக்கி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக ராகுல் காந்தியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார். 
ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

நாடாளுமன்றத்தில் பெண்களை நோக்கி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக ராகுல் காந்தியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ஸ்மிருதி இரானி கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி அவைநேரத்தின்போது செய்த செயல் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி. பேசும்போது, தகாத முறையில் ஒழுங்கீனமான சைகைகளைக் காட்டினார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுலின் இந்த செயல் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல், அவையின் செயல்பாடுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும், கூட்டத்தொடரை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று (ஆக. 9) நடைபெற்றது.

இந்த விவாதத்தை முடித்துக்கொண்டு அவர் ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டபோது, பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி ராகுல் காந்தி முத்தங்களை காற்றில் பறக்கவிட்டுச் சென்றதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com