வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

என் முகத்தைப் பார்க்க பிரதமர் மோடி விரும்பியிருக்க மாட்டார்; அதனால்..: ராகுல் காந்தி

தொலைக்காட்சியில் எனது முகத்தைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பியிருக்க மாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 12:27 pm

DIN


புது தில்லி: தொலைக்காட்சியில் எனது முகத்தைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பியிருக்க மாட்டார், ஆனால், எனது விடியோக்கள் குறித்து அவர் பேசுவார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த போது, ராகுல் காந்தி 37 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால், 14 நிமிடங்கள் மட்டுமே அவரது உரை மக்களவைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, ஒருவேளை, எனது முகத்தை தொலைக்காட்சியில் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லையோ, ஆனால் அவர் எனது விடியோக்களைப் பற்றி பேசுவார் என்று பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் என்னால் எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால், மக்களவைத் தொலைக்காட்சியையும், ஊடகத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராவாரா? இல்லையா? என்பது அல்ல கேள்வி, மணிப்பூரில் குழந்தைகளும் மக்களும் கொல்லப்பட்டதுதான் கேள்வி என்று ராகுல் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளில் பல கருவிகளை வைத்திருக்கிறார். ஆனால் மணிப்பூரில் கலவரத்தை ஒடுக்க அதில் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அவர் ஒன்றுமே செய்யாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.