மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹிமாசல் கனமழை: பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!

ஹிமாசலில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 2:18 pm

ஹிமாசலில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பெரியளவில் மழை இல்லை என்றாலும், வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை பல்வேறு பாதிப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக ஹிமாசலில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

சிம்லாவில் சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

கனமழை காரணமாக கல்கா-சிம்லா, சண்டிகர்-மணாலி உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அங்கு  மேலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும், நாளை வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.