பொய்த்துப்போன பருவமழை: கர்நாடகத்தில் 43% மழை குறைவு!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13 சதவீதம் குறைவாகப் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
பொய்த்துப்போன பருவமழை: கர்நாடகத்தில் 43% மழை குறைவு!


கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13 சதவீதம் குறைவாகப் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடகத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கேரளம் மற்றும் குடகில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்தும் குறைந்துள்ளது. நீர்த்தேக்கங்களில் கூடுதல் தண்ணீர் வரும்போதெல்லாம், கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படியொரு நிலை இல்லை. இருப்பினும், தமிழகம் தண்ணீர் திறந்துவிடக் கோரி வருகிறது. 

எங்கள் நிலைமையையும் ஆராய வேண்டும். துன்பத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும், குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 43 சதவீத மழைப் பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com