வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தி: சிசேரியனின் போது பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தி: சிசேரியனின் போது பெண்ணுக்கு நேர்ந்த அவலம்


விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே எலுரு அரசு மருத்துவமனையில், அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற பெண், வீடு திரும்பிய பிறகும், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டபோது, வேறு ஒரு மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர்கள் பயன்படுத்திய கத்தியை, வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்துவிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, கத்தியை வெளியே எடுத்தனர். இது குறித்து எலுரு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த ஸ்வப்னாவுக்கு ஆகஸ்ட் மாதம் தான் அறுவை சிகிச்சை செய்து கத்தி அகற்றப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவர் வயிற்று வலியுடன் அவதிப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், 2 இன்ச் அளவுள்ள கத்தியால், அவரது பெருங்குடலில் தொற்று பாதித்து அப்பகுதியும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. வெறும் வயிற்றுவலி என்று பெண் இருந்திருந்தால் அவரது உயிரே பறிபோயிருக்கும் என்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com