மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 இளைஞர்கள் சுட்டுக் கொலை!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதிய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 8:06 am

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதிய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தும், உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் இன்று அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியது, 

லிட்டன் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமத்திலிருந்து அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது. 

இதையடுத்து, சுற்றியுள்ள கிராமத்தின் வனப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துப்பாக்கிச் சூட்டில் 24 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டது. 

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்களில் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர். அவர்களின் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

முன்னதாக, இந்தமாதம் 5-ம் தேதி விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று மைத்தேயி மற்றும் 2 குகி சமூகத்தினர் கொல்லப்பட்டனர். 

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53% மைத்தேயி இனத்தையும், 40% பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குயினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பதிகளில் வசிக்கும் மைத்தேயி இனைத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதையடுத்து அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.