ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா, கார்கே மரியாதை

ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்தினர்.  
ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா, கார்கே மரியாதை

ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் வீர்பூமிக்கு வெளியே ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றார். தொடர்ந்து பாங்காங் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார்.

லடாக்கிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி குறித்து ட்விட்டர் தளத்திலும் நினைவு கூர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com