எந்திரன் பட பாணியில் இஸ்ரோ தேர்வில் முறைகேடு செய்த இருவர் கைது
எந்திரன் பட பாணியில் முறைகேடு செய்த ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.


எந்திரன் பட பாணியில் இஸ்ரோ தேர்வில் முறைகேடு செய்த இருவர் கைது
திருவனந்தபுரம்: விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வில் எந்திரன் பட பாணியில் முறைகேடு செய்த ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரத்தில் நடந்த எழுத்துத் தேர்வில், இரண்டு தேர்வு மையங்களில் இருந்து இரண்டு பேர் முறைகேடு செய்து காவல்துறையிடம் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற.
ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இரண்டு பேர் தவிர, இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் ஹரியானாவைச் சேர்ந்த நான்கு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயின்ற பயிற்சி மையத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள், கேள்வித்தாளை புகைப்படம் மூலம் வெளியில் இருக்கும் சிலருக்கு அனுப்பு, காதில் பொருத்தப்பட்டிருந்த ப்ளூ-டூத் மூலம் விடைகளைப் பெற்று தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஹரியானாவில் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மூலம் பெறப்பட்ட தகவலின் பேரில் இருவரும் பிடிபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...