அனைத்தும் தயார்; தரையிறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்: இஸ்ரோ!

திட்டமிடப்பட்ட பகுதிக்கு லேண்டர் வந்தவுடன் தரையிறக்க தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அனைத்தும் தயார்; தரையிறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்: இஸ்ரோ!

பெங்களூரு: திட்டமிடப்பட்ட பகுதிக்கு லேண்டர் வந்தவுடன் தரையிறக்க தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் ஒரு மாத பயணத்தை தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

இதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திட்டமிடப்பட்ட பகுதிக்கு லேண்டர் வந்தவுடன் அதனை மெதுவாக தரையிறக்க அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், சந்திரயான் குழுவினர் ஒவ்வொரு கட்டமாக லேண்டருக்கு கட்டளையிட உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

லேண்டர் தரையிறக்கும் பணிகள் 5.44 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், சரியாக 19 நிமிடங்களில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணிகள் நிறைவடையும்.

இந்த நிகழ்வானது இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப், ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படவுள்ளது.

லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com