நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கப் போகும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாள்களாக புவி வட்டப் பாதையிலும், நிலவின் சுற்று வட்டப் பாதையிலும் பயணித்ததுடன் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக கடந்து புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.
ஒவ்வொரு படிநிலையை சந்திரயான் கடக்கும்போதும் தேசத்தின் மனநிலையில் பரவசமும் பரபரப்பும் ஒருசேர கலந்திருந்தன. சரித்திர சாதனைக்கு ஆயத்தமாகி உள்ள சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாள்களாக மேற்கொண்ட பயணத்தின் மீள்பாா்வை:
ஜூலை 13 - சந்திரயான் - 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் தொடக்கம்.
ஜூலை 14 - எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஜூலை 15 - குறைந்தபட்சம் 173 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவு கொண்ட புவி வட்டப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
ஜூலை 17 - விண்கலம் பயணிக்கும் புவி வட்டப் பாதையின் தொலைவு 41,603 கி.மீ. * 226 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | நிலவில் 'உச்சா' போன மனிதர் யார்?
ஜூலை 25 - சந்திரயான்-3 சுற்றுப் பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிப்பு. குறைந்தபட்சம் 236 கி.மீ மற்றும் அதிகபட்சம் 1,27,603 கி.மீ தொலைவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது.
ஆக. 1 - புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கிய புதிய பயணத்தைத் தொடங்கியது சந்திரயான் 3.
ஆக. 5 - மைல்கல் நிகழ்வாக நிலவின் ஈா்ப்பு விசைக்குள் நுழைந்த விண்கலம், குறைந்தபட்சம் 164 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18,074 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
ஆக. 6 - விண்கலம் பயணிக்கும் சுற்றுப் பாதை தொலைவு 170 கி.மீ * 4,313 கி.மீ-ஆக குறைப்பு.
ஆக. 9 - சுற்றுப் பாதை தொலைவு 174 கி.மீ. * 1,437 கி.மீ.-ஆக குறைப்பு.
ஆக. 14 - சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வரும் நிலவு வட்ட பாதைத் தொலைவு குறைந்தபட்சம் 150 கி.மீ.-ஆகவும், அதிகபட்சம் 177 கி.மீ-ஆகவும் மேலும் குறைக்கப்பட்டது.
ஆக. 17 - சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
ஆக. 20 - நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ.* 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.
ஆக. 21 - சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!
போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

