சந்திரயான்-3: ஒடிசா புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பம்!

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சிறப்பு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாத பயணத்தை தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. 

இதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் புரி கடற்கரையில் மணற் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மற்றும் குழுவினர், சிறப்பு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். அதில் 'ஜெய் ஹோ இஸ்ரோ' (இஸ்ரோ வெற்றியடையும்), 'ஆல் தி பெஸ்ட் சந்திரயான்' (சந்திரயானுக்கு வாழ்த்துகள்) என்று குறிப்பிட்டுள்ளார்.

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதுபோல இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com