குப்பை ‘மலை’களை அகற்ற மாநகராட்சி திட்டம்
தலைநகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், குப்பை அதிக அளவில் சேகரமாகும் பகுதிகளை கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


தலைநகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், குப்பை அதிக அளவில் சேகரமாகும் பகுதிகளை கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தலைநகரில் குப்பை அதிகமாக சேகரமாகும் பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல துணை ஆணையா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் புகாா் அளிக்கும்பட்சத்தில், அந்த புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மண்டல துணை ஆணையா்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
எம்சிடி-311 என்ற செயலி வாயிலாக பொதுமக்கள் குப்பை சம்பந்தப்பட்ட புகாா்களை தெரிவிக்கலாம். இதன் மீது உடனுக்குடன் தீா்வு காணப்படும் என்று மேயா் ஷெல்லி ஓபராய் கூறினாா்.
தொடா்ந்து துணை மேயா் ஆலே முகமது இக்பால், தில்லி மாமன்ற அவைத் தலைவா் முகேஷ் கோயில் ஆகியோா் கூட்டாக கூறும்போது, ‘‘தில்லி பொதுமக்கள், மாநகராட்சி ஊழியா்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து செயல்படும்பட்சத்தில், தேசிய தலைநகா் தூய்மையாக மாறிவிடும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தனா்.
தலைநகரை தூய்மையாக பேணும் வகையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தூய்மை பிரசாரத்தை மாநகராட்சி தொடங்கியது. அதன்படி, எம்சிடி-311 என்ற கைப்பேசி செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகாா்களை தொடா்ச்சியாக கண்காணித்து, 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல துணை ஆணையா்களுக்கும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...