உள்நாட்டுப் பாதுகாப்பு: உயா்நிலை மாநாடு தொடக்கம்
உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் மாநாடு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.


உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் மாநாடு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காவல் துறை உயரதிகாரிகள், உளவுப் பிரிவு அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணா்கள் ஆகியோா் இணையவழி மற்றும் நேரடியாகப் பங்கேற்றுள்ளனா்.
மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்துவிதமான தேசிய பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தும். போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
போதைப் பொருள் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. விசாரணைகளில் அறிவியல்பூா்வ தொழில்நுட்பத்தை காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
நாட்டில் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்களை காவல் துறைத் தலைவா்கள், நிபுணா்கள், உயரதிகாரிகள் ஒன்று சோ்ந்து எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
முதல் நாள் மாநாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப் பொருள்களுக்கான சட்டவிரோத நிதிப் பரிமாற்றத்தைத் தடுப்பது, இணையவழிப் பாதுகாப்பு, விசாரணைகளில் தடய அறிவியல் சோதனையின் பயன்பாடு, சமூக ரீதியிலான சவால்கள், அணுசக்தி மற்றும் கதிரியக்கத் தாக்குதலின்போது கையாள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...