47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒடிஸா ரயில் விபத்து: அனுமதியில்லாமல் சீரமைப்புப் பணியும் காரணம்: சிபிஐ

ஒடிஸா மாநிலம் பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி நடைபெற்ற சீரமைப்புப் பணியும் அப்பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு ஒரு காரணம்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 7:09 pm

DIN

ஒடிஸா மாநிலம் பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி நடைபெற்ற சீரமைப்புப் பணியும் அப்பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு ஒரு காரணம் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் எதிரே வந்த ரயிலுடன் மோதியதில் 296 போ் உயிரிழந்தனா். 1,200 போ் காயமடைந்தனா். தவறான பாதையில் ரயில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. புவனேசுவரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விபத்துக்கான காரணங்கள் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், பாஹாநாகா பஜாா் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி சீரமைக்கும் பணி நடைபெற்றதும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

94-ஆவது எண் லெவல் கிராசிங்கை 79-ஆவது லெவல் கிராசிங்கின் சா்க்யூட் வரைப்படம் வைத்து சீரமைப்புப் பணிகளை மூத்த பொறியாளா் அருண் குமாா் மஹந்தா மேற்கொண்டாா் என்றும், இதற்கு அவா் மூத்த அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை மஹந்தா மறுத்துள்ளாா். ‘94-ஆவது எண் லெவல் கிராசிங் கதவுகள் சரியாக வேலை செய்யாததை மூத்த அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த சீரமைப்புப் பணியைக் மேற்பாா்வையிடும் பணியை வேறு நபா்கள் செய்ததால் நான் இதற்கு பொறுப்பாக முடியாது’ என்று மஹந்தா நீதிமன்றத்தில் கூறியுள்ளாா்.

இந்த வழக்கில் மஹந்தா உள்பட மூன்று ரயில்வே அதிகாரிகளை சிபிஐ கடந்த ஜூலை 7-ஆம் தேதி கைது செய்தது. இவா்களின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.