சீன வரைபட விவகாரம் மிகவும் தீவிரமானது; இது குறித்து பிரதமர் பேச வேண்டும்: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

லடாக்கில் உள்ள இந்தியாவின் நிலத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று புதன்கிழமை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


புது தில்லி: சீனா தனது புதிய வரைபடத்தில் இந்தியாவுக்குள்பட்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதியை இணைத்து வெளியிட்ட விவகாரம் "மிக தீவிரமானது" என்றும், லடாக்கில் உள்ள இந்தியாவின் நிலத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று புதன்கிழமை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த வாரம் லடாக் சென்ற ராகுல் காந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய நிலப்பரப்புகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக உள்ளூர் மக்கள் கவலைப்படுகிறார்கள். சீன படையினர் மேய்ச்சல் நிலத்தை அபகரித்ததாக கூறுகிறார்கள். ஆனால்,  நமது நிலத்தில் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்வதில் உண்ணையில்லை. நீங்கள் இங்கு இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இதனை கேட்டு தெரிந்துகொள்ளலாம். அண்டை நாட்டால் நமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் லடாக் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை, அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் மீது அதன் எல்லைகளுக்குள் உள்ள பகுதிகளை தங்கள் பகுதிகளாக இணைத்து  " புதிய வரைபடம் 2023" பதிப்பை வெளியிட்டது சீனா. இந்த வரைபடம் தொடர்பாக சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செவ்வாய்கிழமை, சீனா வெளியிட்டுள்ள வரைபடங்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால் இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றும், ‘சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது. சீன அரசின் இது போன்ற நடவடிக்கைகள், எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதை மேலும் "சிக்கலாக்கும்" என்றும் கூறினார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக புதன்கிழமை பெங்களூரு புறப்படுவதற்காக தில்லி விமான நிலையம் வந்த ராகுல் காந்தியிடம்,  சீனா தனது புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் பகுதியை இணைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று நான் “பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஆனால் லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது ஒரு "முழுமையான பொய்".

நமது நிலத்தை சீனா "ஆக்கிரமித்துள்ளது" லடாக்கில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். 

""சீனா வெளியிட்டுள்ள இந்த வரைபடப் பிரச்னை மிகவும் தீவிரமானது, ஆனால் அவர்கள் ஏற்கனவே நமது நிலத்தை ஆக்கிரமித்துவிட்டனர், அது குறித்து பிரதமர் ஏதாவது சொல்ல வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com