தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகத்தில் காங்கிரஸ் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும்: ராகுல்

சித்தராமையா தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள பணி நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 10:55 am

DIN

கர்நாடகத்தில் தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றியுள்ளதாகவும், சித்தராமையா தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள பணி நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார். 

தேர்தலுக்கு முந்தைய மற்றொரு முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு சுமார் 1.1 கோடி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2000 வழங்கும் கிரக லட்சுமி திட்டம் இன்று தொடங்கியது. 

மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது ராகுல் கூறுகையில், 

நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம். கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும். காங்கிரஸின் உத்தரவாதங்கள் வெறும் திட்டங்கள் அல்ல, அவை ஒரு ஆட்சி மாதிரி. ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என்று அவர் கூறினார். 

தேர்தலுக்கு முன் அளித்த 5 வாக்குறுதிகளில் மூன்று ஏற்கனவே செயல்படுத்தியுள்ள நிலையில், இது நான்காவது வாக்குறுதியாகும்.

ஐந்தாவது வாக்குறுதி "யுவ நிதி" திட்டம். இது வேலையில்லா பட்டதாரிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் மாதம் ரூ.3,000 முதல் ரூ.1,500 வரை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் செயல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமையா விழாவில் தனது உரையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.