நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி!

கர்நாடகத்தில் புதிய திட்டத்தை தொடங்கிவைக்கும் பொருட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு வந்தடைந்தார். 

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:45 am

DIN

கர்நாடகத்தில் புதிய திட்டத்தை தொடங்கிவைக்கும் பொருட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு வந்தடைந்தார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் குடும்ப லட்சுமி திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மைசூரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தியும் இன்று பிற்பகல் பெங்களூரு வந்தார். 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.