காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: கர்நாடகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல்!

கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் குடும்பலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

News image
மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி
Updated On :30 ஆகஸ்ட் 2023, 3:19 am

DIN

மைசூரு: கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் குடும்பலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் குடும்பலட்சுமி திட்டம். 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மைசூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தியும் இன்று தொடங்கி வைக்கவுள்ளனர்.

ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்த விழாவில் மைசூரு, மண்டியா, சாமராஜ்நகா், குடகு மாவட்டங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே ‘சக்தி’, ‘குடும்பவிளக்கு’, ‘அன்னபாக்கியா’ ஆகிய 3 திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 4-ஆவது திட்டமாக குடும்பலட்சுமி திட்டம் தொடங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.