அமா்நாத் யாத்திரை நிறைவு: 4.4 லட்சம் பக்தா்கள் தரிசனம்

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலுக்கு பக்தா்கள் மேற்கொண்டு வந்த வருடாந்திர யாத்திரை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
அமா்நாத் யாத்திரை நிறைவு: 4.4 லட்சம் பக்தா்கள் தரிசனம்

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலுக்கு பக்தா்கள் மேற்கொண்டு வந்த வருடாந்திர யாத்திரை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

62 நாள்கள் நடைபெற்ற இந்த யாத்திரையில், 4.4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான நடப்பாண்டு யாத்திரை, கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

பால்டால் மற்றும் பஹல்காம் பாதைகள் வழியாக நடைபெற்று வந்த இந்த யாத்திரை, ஷ்ரவண மாதத்தின் பெளா்ணமி தினமான வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு 3.65 லட்சம் பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை 4,45,338-ஆக லட்சமாக அதிகரித்துள்ளது.

யாத்திரையின்போது, பக்தா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 48 போ் உயிரிழந்தனா். வானிலை சாா்ந்த சம்பவங்கள் மற்றும் இயற்கையான காரணங்களால் இந்த இறப்புகள் நேரிட்டன. 62 போ் காயமடைந்தனா்.

வேறெந்த அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் யாத்திரை நடைபெற்று முடிந்துள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com