காவிரி நீர் விவகாரம்: தில்லியில் சட்ட நிபுணர்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டார். 
காவிரி நீர் விவகாரம்: தில்லியில் சட்ட நிபுணர்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டார். 

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீரை 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி வீதம் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவுடன், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தில்லியில் கர்நாடக பவனில் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தினோம். கர்நாடக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரை சந்தித்து பேசவிருக்கிறோம். தினமும் 5,000 கன அடி காவிரி விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகத்திற்கு மிகப்பெரிய வலி. ஏனெனில் கர்நாடகத்தில் மழை இல்லை. கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்களும் தமிழ்நாட்டு விவசாயிகளை மதிக்கிறோம். கர்நாடகம் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு மேக்கேதாட்டு அணைதான். இது கர்நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் உதவும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com