தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

News image
மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த சிவசேனை, காங்கிரஸ் மற்றும் திமுகவினர். 
Updated On :31 ஆகஸ்ட் 2023, 10:15 am

DIN

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியின் பெயரில் ஒன்றிணைந்துள்ளன.

26 எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூனில் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் நடைபெற்றது. 

Story image

தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 31, செப்.1) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மும்பை செல்கின்றனர். 

இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மும்பை விமான நிலையம் சென்ற அவருக்கு சிவசேனை, காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மு.க. ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.