பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை!

கேரளத்தில் தன் உறவினர் குழந்தைகளைத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பலால் கிராம பஞ்சாயத்தில் வசித்துவந்த குற்றவாளி, தன் உறவினரின் 3 குழந்தைகளை மூன்று வருடமாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

21 பாலியல் குற்றசாட்டுகள் நிரூபனமான நிலையில் ஹோஸ்தர்க் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி சி.சுரேஷ், குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார். அண்டை வீட்டார் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகளின் பள்ளி ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நல ஆலோசகரின் உதவியோடு ஆசிரியர்கள் குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில் மூன்று ஆண்டுகளாக இரண்டு ஆண்குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர்களது 25 வயதான உறவினர் பாலியல் வன்கொடுமை செய்தது கண்டறியப்பட்டது.

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, குழந்தைகளைக் கடத்தியது, குழந்தைகளை மிரட்டி அச்சுறுத்தியது, 2019-ல் சிறுமியின் சகோதர்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 2022-ல் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தது என அவரது தொடர் குற்றங்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 189 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை தண்டனைகள் ஒன்றாக தொடரப்படும் என்பதால் குற்றவாளி 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com